கண்ணில்லாத மனிதன் பாடல்கள் மற்றும் விவரங்கள்

ஃப்: கண்ணிழந்த மனிதன்
முன்னே ஓவியம் வைத்தார்
கண்ணிழந்த மனிதன்
முன்னே ஓவியம் வைத்தார்
இரு காதில்லாத மனிதன்
முன்னே பாடல் இசைத்தார்... பாடல் இசைத்தார்

ம்: கண்ணிருந்தும் ஓவியத்தை
காட்டி மறைத்தார்
இரு காதிருந்தும் பாதியிலே
பாட்டை முடித்தார்
பாட்டை முடித்தார்

ஃப்: ஆட வந்த மேடையிலே
முள்ளை வளர்த்தார்
அணைக்க வந்த கரங்க்களுக்கு
தடையை விதித்தார்
ஆட வந்த மேடையிலே
முள்ளை வளர்த்தார்
அணைக்க வந்த கரங்க்களுக்கு
தடையை விதித்தார்
காய்ந்து விட்ட மரத்தினிலே
கொடியை இணைத்தார்
தாவி வந்த பைங்க்கிளியின்
சிறகை ஒடித்தார்

ஃப்: கண்ணிழந்த மனிதன்
முன்னே ஓவியம் வைத்தார்
ம்: கண்ணிருந்தும் ஓவியத்தை
காட்டி மறைத்தார்...காட்டி மறைத்தார்

ஃப்: பெண் பெருமை பேசி பேசி
காலம் கழிப்பார்
தன் பெருமை குலையும் எண்ட்றால்
பெண்ணை அழிப்பார்
பெண் பெருமை பேசி பேசி
காலம் கழிப்பார்
தன் பெருமை குலையும் எண்ட்றால்
பெண்ணை அழிப்பார்
ம்: முன்னுமில்லை பின்னுமில்லை முடிவுமில்லையே
மூடன் செய்த விதிகளுக்கு தெளிவுமில்லையே

ஃப்: கண்ணிழந்த மனிதன்
முன்னே ஓவியம் வைத்தார்
இரு காதில்லாத மனிதன்
முன்னே பாடல் இசைத்தார்
கண்ணிழந்த மனிதன்
முன்னே ஓவியம் வைத்தார்
இரு காதில்லாத மனிதன்
முன்னே பாடல் இசைத்தார்... பாடல் இசைத்தார்



ஆடிப்பெருக்கு
திரைப்படத்தின் பெயர்ஆடிப்பெருக்கு
திரைப்பட நடிகர்கள்AM. ராஜா, B. சரோஜாதேவி, சந்திரபாபு, ஜெமினி கணேசன்
இசைஅமைப்பாளர்பழையது
திரைப்படத்தின் இயக்குனர்K. சங்கர்
பாடல் வெளியான ஆண்டு 1962
பாடல்கள்7
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
காவேரி ஓரம் P.சுசீலா K.D.Santhanam 3:10 படிக்க
கண்மூடும் வேளையிலும் AM. ராஜா கிடைக்கவில்லை 3:13 கிடைக்கவில்லை
கண்ணாலே பேசும் காதல் நிலையாகும P.சுசீலா கிடைக்கவில்லை 3:14 கிடைக்கவில்லை
கண்ணில்லாத மனிதன் AM. ராஜா K.D.Santhanam 3:29 படிக்க
கண்ணிழந்த மனிதர் முன்னே ஓவியம் வைத்தார் AM. ராஜா, P.சுசீலா K.D.Santhanam 3:29 படிக்க
பெண்களில்லாத உலகத்திலே AM. ராஜா, P.சுசீலா கிடைக்கவில்லை 6:32 படிக்க
தனிமையிலே AM. ராஜா, P.சுசீலா Kannadasan 3:24 படிக்க