வானம் தரையில் பாடல்கள் மற்றும் விவரங்கள்
பச்சை மாமலைபோல் மேனி பவள வாய் கமலச் செங்கண் அச்சுதா அமரரே...ஆயர்தம் கொழுந்தே... ஆ...ஆ...ஆ...ஆ... தர தீம்த தீம்த தீம்த... வானம் தரையில் வந்து நின்றதே ஆ... பூமி நிலவில் புகுந்துகொண்டதே திசைகள் எல்லாம் திரும்பிக்கொண்டதே தென்றல் பூக்களைப் பொழிந்துகொண்டதே விழிகளை வீசிய இளைய கொடி இந்த விபத்துக்கள் உன்னால் நேர்ந்ததடி (2) ஒருமுறை அடி ஒரே முறை ஒரு பார்வை பார் உலகம் சுழலும் மறுபடி (வானம்) இமைகளைக் கொண்டு இருதயம் தோன்றும் கதைகளை உந்தன் இரு கண்களில் வைத்தாய் கும்ச கும்சல்ச கும்ச கும்ச... உதடுகள் அசைவில் உயிரை உறிஞ்சும் செப்படி வித்தை அடி எப்படி கட்றாய் புருவங்களில் மலையே வளையுமடி புன்னகையில் ஜீவன் தவிடுபொடி பூக்களின் கனவே வா பூமியின் நிலவே வா இனிக்கின்ற தீயே வா இன்னிசை நதியே வா (வானம்) சித்திர இதழில் தீக்குச்சி கிழித்தாய் என் ரத்தத்தில் இருந்தாய் நான் முத்தத்தில் எரிந்தேன் கும்ச கும்சல்ச கும்ச கும்ச... பௌர்ணமி விழியால் பால் மழை பெய்தாய் என் சாம்பலில் இருந்து நான் சட்டென்று முளைத்தேன் பார்த்ததிலே பாதி இளைத்து விட்டேன் கண்களிலே ஒன்றைத் தொலைத்து விட்டேன் சிறகுள்ள மலரே வா இமைக்கின்ற சிலையே வா ஆனந்தக் கலையே வா என் ஆண்மையின் விலையே வா (வானம்) |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|