என்னபாட சொல்லாதே பாடல்கள் மற்றும் விவரங்கள்

என்ன பாடச் சொல்லாதே நான் கண்டபடி பாடிபுடுவேன்... (3)
அத கேட்டா மடயனுக்கும் ஞனம் பொறந்திதும்
மூடி கிடக்கும் பல கண்ணும் தொறந்திடும்
கேட்டா மடயனுக்கும் ஞனம் பொறந்திடும்
அட மூடி கிடக்கும் பல கண்ணும் தொறந்திடும்
பாடச் சொல்லாதே நான் கண்டபடி பாடிபுடுவேன்

தேவாரமும் படிச்சோம் திருவாசகம் படிச்சோம்
தெரியாம திருக்குரளும் தான் படிசோம்
ஆனான படிப்பை எல்லாம் அன்னாடம் படிசுப்புட்டு
புரியாம தெரியாம தான் முழிச்சோம்
அறிவான ஆத்திச்சூடி கொடுத்தாளே அவ்வை பாட்டி
அதக் கூட பாடி என்ன கிழிசிப்புட்டோம்
அறிவான ஆத்திச்சூடி கொடுத்தாளே அவ்வை பாட்டி
அதக் கூட பாடி என்ன கிழிசிப்புட்டோம்
நாடும் என்னச்சி நம்ம ஊரும் என்னச்சி
அட பேசி பேசித்தான் நல்ல பொழுதும் போயச்சி
இந்த டெசம் ரொம்ப மோசம் இத பார்கும்போது இப்போ

என்ன பாடச் சொல்லாதே நான் கண்டபடி பாடிபுடுவேன் (2)

காம்போதியும் தெரியும் கல்யாணியும் புரியும்
பொதுவாக நெனச்சதும் நான் பாட்டெடுப்பேன்
ஆகாத பொழப்பை எல்லாம் அனியாய நடப்பை எல்லாம்
அஞ்சாம என் பாட்டில் போட்டுடைப்பேன்
நாய் வாலை நிமிர்துறதும் காக்காய வெளுக்குறதும்
அம்மாடி யாரால ஆகும் இப்போ
நாய் வாலை நிமிர்துறதும் காக்காய வெளுக்குறதும்
அம்மாடி யாரால ஆகும் இப்போ
பார்க்க போனாக்கா நான் பொட்டப் புள்ளதான்
அட போட்டி போட்டாக்கா ரொம்ப கெட்ட புள்ளதான்
ஒரு வேகம் ஒரு கோபம் ஒன்னு சேரும்போது இப்பொ

என்ன பாடச் சொல்லாதே நான் கண்டபடி பாடிபுடுவேன் (2)
அத கேட்டா மடயனுக்கும் ஞனம் பொறந்திடும்
மூடி கிடக்கும் பல கண்ணும் தொறந்திடும்
பாடச் சொல்லாதே நான் கண்டபடி பாடிபுடுவேன்




ஆண் பாவம்
திரைப்படத்தின் பெயர்ஆண் பாவம்
திரைப்பட நடிகர்கள்ஜனகராஜ் , R பாண்டியராஜன், ரேவதி, சீதா
இசைஅமைப்பாளர்இளையராஜா
திரைப்படத்தின் இயக்குனர்R. பாண்டியராஜன்
பாடல் வெளியான ஆண்டு 1986
பாடல்கள்9
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
அரசபட்டி கொல்லங்குடி கருப்பாயி கிடைக்கவில்லை 1:15 கிடைக்கவில்லை
சாய சீலை கொல்லங்குடி கருப்பாயி கிடைக்கவில்லை 1:06 கிடைக்கவில்லை
என்னபாட சொல்லாதே S. ஜானகி கிடைக்கவில்லை 4:17 படிக்க
காதல் கசக்குது இளையராஜா Ilaiyaraaja 4:29 படிக்க
கூத்து பார்க்க கொல்லங்குடி கருப்பாயி கிடைக்கவில்லை 1:29 கிடைக்கவில்லை
குயிலே குயிலே K.S. சித்ரா, மலேசியா வாசுதேவன் கிடைக்கவில்லை 4:22 படிக்க
ஒட்டி வந்த கொல்லங்குடி கருப்பாயி கிடைக்கவில்லை 5:32 கிடைக்கவில்லை
பேராண்டி கொல்லங்குடி கருப்பாயி கிடைக்கவில்லை 1:11 கிடைக்கவில்லை
வந்தனம் இளையராஜா கிடைக்கவில்லை 3:41 கிடைக்கவில்லை