ஏழு ஸ்வரங்களுக்குள் பாடல்கள் மற்றும் விவரங்கள்
ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல் இதயச் சுரங்கத்துள் எத்தனை கேள்வி காணும் மனிதருக்குள் எத்தனை சலனம் - வெறும் கற்பனை சந்தோஷத்தில் அவனது கவனம் (2) (ஏழு) காலை எழுந்தவுடன் நாளைய கேள்வி அது கையில் கிடைத்த பின்னும் துடிக்குது ஆவி ஏனென்ற கேள்வி ஒன்றே என்றைக்கும் தங்கும் - மனித இன்ப துன்பம் எதிலும் கேள்விதான் மிஞ்சும் (2) (ஏழு) எனக்காக நீ அழுதால் இயற்கையில் நடக்கும் (2) நீ எனக்காக உணவு உண்ண எப்படி நடக்கும் நமக்கென்று பூமியிலே கடமைகள் உண்டு - அதை நமக்காக நம் கையால் செய்வது நன்று (2) (ஏழு) ஆரம்பத்தில் பிறப்பும் உன் கையில் இல்லை (2) என்றும் அடுத்தடுத்த நடப்பும் உன் கையில் இல்லை பாதை வகுத்த பின்பு பயந்தென்ன லாபம் (2) - அதில் பயணம் நடத்திவிடு மறைந்திடும் பாவம் (2) (ஏழு) நாளைப் பொழுது என்றும் நமக்கென வாழ்க அதை நடத்த ஒருவனுண்டு கோவிலில் காண்க -1&2 - (2) வேளை பிறக்கும் என்று நம்பிக்கை கொள்க (2) எந்த வேதனையும் மாறும் மேகத்தைப் போல (2) (ஏழு) |
||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||
|