ஆகாசப் பந்தலிலே ஆயிரம் பூ பாடல்கள் மற்றும் விவரங்கள்

ஆகாச பந்தலிலே ஆயிரம் பூ பூத்திருக்கும்
ஆனாலும் நிலவு வந்தா அல்லியைத்தான் பார்த்திருக்கும்

ஆகாச பந்தலிலே....

தென்றல் வந்து ஊஞ்சல் கட்ட
ஆல மரம் விழுது விடும்
தென்றல் வந்து ஊஞ்சல் கட்ட
ஆல மரம் விழுது விடும்
தேன் குயில்கள் பாட்டிசைக்கவே
தேன் குயில்கள் பாட்டிசைக்கவே
தென்னை மரம் தலையசைக்கும்
தென்னை மரம் தலையசைக்கும்

ஆகாச பந்தலிலே....

தாமரையில் தேன் எடுக்க
வண்டு வந்து சத்தமிடும்
தாமரையில் தேன் எடுக்க
வண்டு வந்து சத்தமிடும்
பூ விரியும் நேரத்திலே
பூ விரியும் நேரத்திலே
பொறுத்திருந்து முத்தமிடும்
பொறுத்திருந்து முத்தமிடும்

ஆகாச பந்தலிலே....

நெல் விளைய புல் விளைய
நீரோடை நிலன் கிழிக்கும்
நெல் விளைய புல் விளைய
நீரோடை நிலன் கிழிக்கும்
அலைகளிலே மேடை கட்டியே
அலைகளிலே மேடை கட்டியே
அன்னமெல்லாம் கதையளக்கும்
அன்னமெல்லாம் கதையளக்கும்


ஆகாச பந்தலிலே ஆயிரம் பூ பூத்திருக்கும்
ஆனாலும் நிலவு வந்தா அல்லியைத்தான் பார்த்திருக்கும்

ஆகாச பந்தலிலே....



அம்மா எங்கே
திரைப்படத்தின் பெயர்அம்மா எங்கே
திரைப்பட நடிகர்கள்கிடைக்கவில்லை
இசைஅமைப்பாளர்பழையது
திரைப்படத்தின் இயக்குனர்G. விஸ்வநாதன்
பாடல் வெளியான ஆண்டு 1964
பாடல்கள்3
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
ஆகாசப் பந்தலிலே ஆயிரம் பூ P.சுசீலா கிடைக்கவில்லை 3:26 படிக்க
நான் வணங்கும் தெய்வமே P.சுசீலா, PB. ஸ்ரீநிவாஸ் Kannadasan 3:17 படிக்க
பாப்பா பாப்பா AL. ராகவன் கிடைக்கவில்லை 3:36 கிடைக்கவில்லை