வசமில்ல பாடல்கள் மற்றும் விவரங்கள்

வாசமில்லா மலரிது...வசந்தத்தை தேடுது...

வாசமில்லா மலரிது...வசந்தத்தை தேடுது...
வைகை இல்லா மதுரை இது...
மீனாக்ஷியை தேடுது...
ஏதேதொ ராகம்...என்னாளும் பாடும்
அழையாதார் வாசல் தலை வைத்து ஓடும்...

வாசமில்லா மலரிது...வசந்தத்தை தேடுது...

பாட்டுக்கொரு ராகம் ஏற்றி வரும் புலவா
உனக்கேன் ஆசை நிலவவள் மேலே
மீட்டி வரும் வீணை சொட்டவில்லை தேனை
உனக்கேன் ஆசை கலைமகள் போலே...(மீட்டி வரும்)

வாசமில்லா மலரிது...வசந்தத்தை தேடுது...

என்ன சுகம் கண்டாய் இன்று வரை தொடர்ந்து
உனக்கேன் ஆசை ரதியவள் மேலே
வஞ்சி அவள் உன்னை எண்ணவில்லை இன்றும்
உனக்கேன் ஆசை மன்மதன் போலே...(வஞ்சி அவள்)

வாசமில்லா மலரிது...வசந்தத்தை தேடுது...

மாதங்களை எண்ண பன்னிரண்டு வரலாம்
உனக்கேன் ஆசை மேலொன்று கூட்ட
மாது தன்னை அரிய கண்ணிரண்டும் பொய்யே
உனக்கேன் ஆசை உரவென்று நாட...(மாது )

(வாசமில்லா)



ஒரு தலை ராகம்
திரைப்படத்தின் பெயர்ஒரு தலை ராகம்
திரைப்பட நடிகர்கள்ஷங்கர்
இசைஅமைப்பாளர்விஜய T. ராஜேந்தர்
திரைப்படத்தின் இயக்குனர்விஜய T. ராஜேந்தர்
பாடல் வெளியான ஆண்டு 1980
பாடல்கள்7
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
என் கதை TM. சௌந்தரராஜன் T.Rajendar 3:24 படிக்க
இது குழந்தை S.P.பாலசுப்பிரமணியம் T.Rajendar 4:38 படிக்க
கடவுள் வாழும் P. ஜெயச்சந்திரன் T.Rajendar 5:00 படிக்க
குடியிலே கருவாடு மலேசியா வாசுதேவன் T.Rajendar 3:25 படிக்க
மன்மதன் ஜாலி ஆபிரகாம் T.Rajendar 4:13 படிக்க
நன் ஒரு TM. சௌந்தரராஜன் T.Rajendar 4:24 படிக்க
வசமில்ல S.P.பாலசுப்பிரமணியம் T.Rajendar 4:48 படிக்க