கை தட்டி தட்டி பாடல்கள் மற்றும் விவரங்கள்

கை தட்டித்தட்டி அழைத்தாளே
என் மனதைத் தொட்டுத்தொட்டுத் திறந்தாளே
என் உயிரை மெல்லத் துளைத்து நுழைந்தாளே
ஜீவன் கலந்தாளே அந்தத் தேங்குயிலே

தரரம்பம் தரரம்பம் தரரம்பம் உன் ஆரம்பம் இன்பம் இன்பம்
பெண் எப்போதும் சுகமான துன்பம் பொன் வானெங்கும் அவளின் இன்பம்

ஐந்து நிமிடங்கள் அவளோடு வாழ்ந்தால் வாழ்வு மரணத்தை வெல்லும்

தரரம்பம் தரரம்பம் தரரம்பம் உன் ஆரம்பம் இன்பம் இன்பம்

ரத்தினத்துத் தேரானாள்
என் மனசுக்குள் சத்தமிடும் பூவானாள்
என் பருவத்தைப் பயிர் செய்யும் நீரானாள்
என் நெஞ்சக் குளத்தில் பொன் கல்லை எறிந்தாள்
அலை அடங்குமுன் நெஞ்சத்தில் குதித்தாள்
விழியால் நெஞ்சுடைத்துவிட்டாள்
ஸ்பரிசங்களால் பின் இணைத்துவிட்டாள்

தரரம்பம் தரரம்பம் தரரம்பம் உன் ஆரம்பம் இன்பம் இன்பம்
பெண் எப்போதும் சுகமான துன்பம் பொன் வானெங்கும் அவளின் இன்பம்

ஐந்து நிமிடங்கள் அவளோடு வாழ்ந்தால் வாழ்வு மரணத்தை வெல்லும்

தரரம்பம் தரரம்பம் தரரம்பம் உன் ஆரம்பம் இன்பம் இன்பம்
தரரம்பம் தரரம்பம் தரரம்பம் தரரம்பம்பம் பம்பம்பம்பம் (2)

பால்வண்ண நிலவெடுத்துப்
பாற்கடலில் பலமுறை சலவை செய்து
பெண்ணுருவாய்ப் பிறந்தவள் அவள்தானோ
என் கவிதைகளில் கண் மலர்ந்தவளோ
என் மௌனங்களை மொழி பெயர்த்தவளோ
அழகைத் தத்தெடுத்தவளோ
என் உயிர் மலரைத் தத்தரித்தவளோ

தரரம்பம் தரரம்பம் தரரம்பம் உன் ஆரம்பம் இன்பம் இன்பம்
பெண் எப்போதும் சுகமான துன்பம் பொன் வானெங்கும் அவளின் இன்பம்

ஐந்து நிமிடங்கள் அவளோடு வாழ்ந்தால் வாழ்வு மரணத்தை வெல்லும்

தரரம்பம் தரரம்பம் தரரம்பம் உன் ஆரம்பம் இன்பம் இன்பம்



ஜோடி
திரைப்படத்தின் பெயர்ஜோடி
திரைப்பட நடிகர்கள்பிரஷாந்த், சிம்ரன்
இசைஅமைப்பாளர்AR. ரெஹ்மான்
திரைப்படத்தின் இயக்குனர்கிடைக்கவில்லை
பாடல் வெளியான ஆண்டு 1999
பாடல்கள்8
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
ஜீவா சிவா, ஸ்வர்ணலதா Vairamuthu 5:30 படிக்க
காதல் கடிதம் S. ஜானகி, உன்னி மேனன் Vairamuthu 5:00 படிக்க
கை தட்டி தட்டி ஸ்ரீநிவாஸ், டிம்மி Vairamuthu 4:07 படிக்க
ஒரு பொய்யாவது ஸ்ரீநிவாஸ், சுஜாதா Vairamuthu 6:28 படிக்க
ஒரு பொய்யாவது (சொகம்) ஹரிஹரன் Vairamuthu 7:07 படிக்க
Theme Music ஹரிஹரன் கிடைக்கவில்லை 6:32 படிக்க
வண்ண பூங்கா மகாலக்ஷ்மி ஐயர் Vairamuthu 6:05 படிக்க
வெள்ளி மலரே மகாலக்ஷ்மி ஐயர், S.P.பாலசுப்பிரமணியம் Vairamuthu 6:33 படிக்க