மானுத்தும் மந்தையிலே பாடல்கள் மற்றும் விவரங்கள்
மானுத்து மந்தையில மாங்குட்டி பெத்த மயிலே பொட்டபுல்ல பொரந்ததுன்னு பொலிகாட்டில் கூவும் குயிலே தாய்மாமன் சீர் சொமந்து வாராண்டி அவன் தங்கக் கொலுசு கொண்டு தாராண்டி சீரு சொமந்த சாதி சனமே ஆரு கடந்தா ஊரு வருமே சீரு சொமந்த சாதி சனமே ஆரு கடந்தா ஊரு வருமே மானுத்து மந்தையில மாங்குட்டி பெத்த மயிலே பொட்டபுல்ல பொரந்ததுன்னு பொலிகாட்டில் கூவும் குயிலே நாட்டுக்கோழி அடிச்சு நாக்குசொட்ட சமச்சி நல்லென்ன ஊத்திக் குடு ஆத்தா வெல்லக் கொடல் வலிச்சா வெல்லப்பூண்டு உரிச்சி வெல்லங்கொஞ்சம் போட்டுக் குடு ஆத்தா பச்ச ஒடம்புக்காரி பாத்து நடக்கச்சொல்லுங்க பில்லக்கி தாய்ப்பாலத் தூக்கிக் கொடுக்கச்சொல்லு மச்சான தின்னையில போத்திப் படுக்கச்சொல்லு மானுத்து மந்தையில மாங்குட்டி பெத்த மயிலே பொட்டபுல்ல பொரந்ததுன்னு பொலிகாட்டில் கூவும் குயிலே ஆட்டுப்பால் குடிச்சா அரிவழிஞ்சி போகுமுன்னு எருமப்பால் குடிச்சா ஏப்பம் வந்து சேருமுன்னு காராம்பசு ஓட்டி வாராண்டி தாஸ் மாமன் வெல்லிச்சங்கு செஞ்சா வெலக்கி வெக்க வேனுமுன்னு தங்கத்தில் சங்கு செஞ்சி தாராண்டி தாய் மாமன் பச்ச ஒடம்புக்காரி பாத்து நடக்கச்சொல்லுங்க ஈ எரும்பு அண்டாம எட்டி இருக்கச்சொல்லு மச்சான ஈரத்துனி கட்டி இருக்கச்சொல்லு மானுத்து மந்தையில மாங்குட்டி பெத்த மயிலே பொட்டபுல்ல பொரந்ததுன்னு பொலிகாட்டில் கூவும் குயிலே |
||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||
|