பார்த்தல் முருகன் முகம் பார்க்க வேண்டும் பாடல்கள் மற்றும் விவரங்கள்
பார்த்தால் முருகன் முகம் பார்க்க வேண்டும் - அவன் பாராதபோது மெல்லப் பார்க்க வேண்டும் கேட்டால் தெய்வானை குரல் கேட்க வேண்டும் - அவள் கேளாதபோதும் இதழ் சேர்க்க வேண்டும் (பார்த்தால்) சித்திர மேனியில் முத்திரை போட்டொரு சேலை அசைந்தாட சேலை முகத்தினில் மாது நிறுத்திய காதல் கலந்தாட கண் மாமணியாட நாணம் கன்னத்தில் நடமாட பொன்னார் திருமேனி அங்க்கே பொன்னூஞ்சல் ஆட (பார்த்தால்) நந்தவனத்தில் கந்தன் இருக்க வந்த தெய்வயானை என்ன கொடுத்தாள் ? கந்தன் முகத்தில் மஞ்சள் முகத்தை மெல்ல மெல்ல சேர்த்து உள்ளம் கொடுத்தாள் அன்னம் கொடுத்தாளோ ஆசை வண்ணம் கொடுத்தாளோ காதல் கொடுத்தாளோ இல்லை காவல் கொடுத்தாளோ (பார்த்தால்) |
||||||||||||||||||||
|
||||||||||||||||||||
|