தமிழே பிள்ளைத் தமிழே பாடல்கள் மற்றும் விவரங்கள்
தமிழே பிள்ளைத் தமிழே தவழும் தந்தச் சிமிழே குரலே கன்றின் குரலே எங்க்கள் குடும்பம் காக்கும் நிழலே தமிழே பிள்ளைத் தமிழே கன்னம் தட்டும் கைகள் ஆசை காந்தம் சிந்தும் கண்கள் சலங்க்கை ஆடும் கால்கள் அவை தமிழைக் காக்கும் நூல்கள் தமிழே பிள்ளைத் தமிழே ஒரு வாய் சோறு ஊட்டும் போது குருவாயூர் கண்டேன் ஓடி ஆடி நடக்கும் போது பிருந்தாவனம் கண்டேன் உக்கி முகர்ந்து கொஞ்ச்கும் போது யசோதை வடிவானேன் உயிரே நிலவே உன்னிடம் கீதை உபதேசம் கேட்டேன் தமிழே பிள்ளைத் தமிழே சொல்லும் மந்திரம் யசோதைக்கென்றால் ஸ்வாமி மலை கண்டேன் தோளில் ஆடும் மணியே நானும் குன்றம் குடி கொண்டேன் சொல்லும் மந்திரம் யசோதைக்கென்றால் ஸ்வாமி மலை கண்டேன் தோளில் ஆடும் மணியே நானும் குன்றம் குடி கொண்டேன் கோபம் கொண்டு ஓடும் போது பழனி மலை கண்டேன் கோவில் பார்க்க நேரம் இல்லை உன்னைத் தான் கண்டேன் தமிழே பிள்ளைத் தமிழே க்ரெடிட்: ஜயந்தி |
||||||||||||||||||||
|
||||||||||||||||||||
|