ஆடைகட்டி பாடல்கள் மற்றும் விவரங்கள்

ஆடை கட்டி வந்த நிலவோ
கண்ணில் மேடை கட்டி ஆடும் எழிலோ
இவள் ஆடை கட்டி வந்த நிலவோ
கண்ணில் மேடை கட்டி ஆடும் எழிலோ
குளிர் ஓடையில் மிதக்கும் மலர் ஜாடையில் சிரிக்கும் இவள்
காடு விட்டு வந்த மயிலோ
நெஞ்சில் கூடு கட்டி வாழும் குயிலோ

துள்ளித் துள்ளி ஆடும் இன்ப லோக மங்க்கை
சொந்தம் உள்ள ராணி இவள் நாக மங்க்கை(2)
எல்லையற்ற ஆசையில் ஓடி வந்தாள்
தள்ளி விட்டுப் போன பின் தேடி வந்தாள்
கிளை தான் இருந்து கனியே சுமந்து
தனியே கிடந்த கொடி தானே
கண்ணாளன் உனைக் கலாந்தனந்தமே பெற
காவினில் வாழும் கிளி நானே

துள்ளித் துள்ளி ஆடும் இன்ப லோக மங்க்கை
சொந்தம் உள்ள ராணி இவள் நாக மங்க்கை

அந்தி வெய்யில் நிறத்தவளோ
குலுங்க்கும் அல்லி மலர் இனத்தவளோ
உந்தி உந்தி விழும் நீரலையில்
ஓடி விளையாடி மணம் சிந்தி வரும் தென்றல் தானோ
இன்பம் தந்த மயில் இவள் தானோ - ஆடைக்கட்டி

ஆஹா..ம்ம்..லாலா..
அன்பு மனம் கூடுவதில் துன்பமில்லை
அஞ்சி அஞ்சி ஓடுவதில் லாபமில்லை
வீணை மட்டும் இருந்தால் நாதமில்லை
மீட்டும் விரல் பிரிந்தால் கானமில்லை

இதயம் கனிந்து யெதையும் மறந்து
இருவர் மகிழ்ந்து உறவாட
நன் நேரமிதே
மனம் மீறிடுதே
நன் நேரமிதே
மனம் மீறிடுதே
மனம் மாளிகை ஓரம் ஆடிடுவோம் - ஆடை கட்டி




அமுதவல்லி
திரைப்படத்தின் பெயர்அமுதவல்லி
திரைப்பட நடிகர்கள்G. வரலக்ஷ்மி, K.A. தங்கவேலு, T.R. மகாலிங்கம்
இசைஅமைப்பாளர்பழையது
திரைப்படத்தின் இயக்குனர்A.K. சேகர்
பாடல் வெளியான ஆண்டு 1950
பாடல்கள்2
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
ஆடைகட்டி P.சுசீலா, TR. மகாலிங்கம் Pattukottai Kalyanasundram 3:23 படிக்க
களம் எனுமொரு அழக் கடலினில் காதல் படகும் விளையாடுதம்மா P.சுசீலா, TR. மகாலிங்கம் கிடைக்கவில்லை 3:20 கிடைக்கவில்லை