அடியே நேற்றுப் பிறந்தவள் நீயே பாடல்கள் மற்றும் விவரங்கள்

ம்: அடியே நெற்று பிறந்தவள் நீயே
நேரம் தெரிந்து வந்தாயே
கண்ணன் பார்த்த ராதை போல
வண்ணம் கொண்டு வந்தாய் நீயே

ம்: அடியே நெற்று பிறந்தவள் நீயே
நேரம் தெரிந்து வந்தாயே
கண்ணன் பார்த்த ராதை போல
வண்ணம் கொண்டு வந்தாய் நீயே


ஃப்: பிறந்தேன் பிறந்தேன் நான் உனக்காக
வளர்ந்தேன் வளர்ந்தேன் சிலை வடிவாக
மலர்ந்தேன் மலர்ந்தேன் தங்க மலராக
இணைந்தேன் கலந்தேன் உந்தன் துணையாக

ஃப்:அடடா நெற்று பிறந்தவள் நானே
நேரம் தெறிந்து வந்தேனே
கண்ணன் பார்த்த ராதை போல
வண்ணம் கொண்டு வந்தேன் நானே

ம்: ஆணும் பெண்ணும் பிறந்த போது
ஆசை நெஞ்சம் வந்ததில்லை
காணக் காண பேசப் பேச
காதல் தந்தான் கடவுள் வாழ்க

ஃப்: உள்ளம் குளிர மேனி துடிக்க
ஊறும் ஆசை வெள்ளம் பெருக
கள்வர் போல மௌனமாக
கலந்து காணும் காதல் வாழ்க

ம்: அடியே நெற்று பிறந்தவள் நீயே
நேரம் தெரிந்து வந்தாயே
ஃப்: கண்ணன் பார்த்த ராதை போல
வண்ணம் கொண்டு வந்தேன் நானே

ம்: வாடைக் காற்றில் வெளியில் நின்றால்
போர்வை போல தழுவிக் கொண்டு
வாடைக் காற்றில் வெளியில் நின்றால்
போர்வை போல தழுவிக் கொண்டு
மார்பின் மீது கண்கள் மூடி
மயக்கம் கொள்ளும் உறவு வாழ்க

ஃப்: என்ன ராதா என்ன கண்ணா
என்ன நாணம் போதும் போதும்
என்ன ராதா என்ன கண்ணா
என்ன நாணம் போதும் போதும்
என்று கோடி வார்த்தை பேசும்
இன்பமான இரவு வாழ்க

ம்: அடியே நெற்றுப் பிறந்தவள் நீயே
யாவும் அறிந்து கொண்டாயே


என் தம்பி
திரைப்படத்தின் பெயர்என் தம்பி
திரைப்பட நடிகர்கள்கிடைக்கவில்லை
இசைஅமைப்பாளர்பழையது
திரைப்படத்தின் இயக்குனர்A.C. திருலோகச்சந்தர்
பாடல் வெளியான ஆண்டு Not Available
பாடல்கள்2
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
அடியே நேற்றுப் பிறந்தவள் நீயே P.சுசீலா, TM. சௌந்தரராஜன் கிடைக்கவில்லை 4:03 படிக்க
தட்டட்டும் கை தழுவட்டும் P.சுசீலா Kannadasan 3:18 படிக்க