வனமெல்லாம் சோனக (f) பாடல்கள் மற்றும் விவரங்கள்

வனமெல்லாம் செண்பகப்பூ
வானெல்லாம் குங்குமப்பூ
தென் பொதிகை காற்றினிலே செந்தாழம்பூ
வனமெல்லாம் செண்பகப்பூ
வானெல்லாம் குங்குமப்பூ
தென் பொதிகை காற்றினிலே செந்தாழம்பூ
நல்லவங்க வாழ்க்கைக்கெல்லாம் சாமி தானே காப்பு
நாமெல்லாம் தெய்வ படைப்பு


(வனமெல்லாம் செண்பகப்பூ.... )


ஆத்தோரம் பூங்கரும்பு
காத்திருக்கும் சிறு எறும்பு
அக்கரையில் ஆயிரம் பூ பூ.....பூ
பூத்திருக்குத் தாமரப் பூ
பொன்னிறத்துக் காஞ்சரம் பூ
புத்தம் புது பூஞ்சிரிப்பு (மத்)தாப்பு
எப்போதும் மாராப்பு
எடுப்பான பூந்தோப்பு
எண்ண எண்ண எங்கும் தித்திப் பூப்பூ
ஒட்டாத ஊதப்பூ
உதிராத வீராப்பு
வண்ண வண்ண இன்பம் ரெட்டிப் பூ...பூ
வழி முழுதும் வனப்பு எனக்கழைப்பு
புதுத் தொகுப்பு வகுப்பு கணக்கெடுப்பு


(வனமெல்லாம் செண்பகப்பூ.... )


கெட்டவர்க்கு மனம் இரும்பு
நல்லவரை நீ விரும்பு
எல்லோர்க்கும் வருவதிந்த மூப்பு
ஏழைகளின் நல்லுழைப்பு
என்ன இங்கு அவர் பிழைப்பு
வாழ்வு வரும் என்று எதிர் பார்ப்பு
வீணாக இழுக்கும் வம்பு
வினையாகும் கைகலப்பு
விட்டு விடு சின்னத் தம்பி ஏய்ப்பு
கையோடு எடு சிலம்பு
கலந்தாட நிமிர்ந்தெழும்பு
கையில் வரும் நல்ல நல்ல வாய்ப்பு
விறுவிறுப்பு இருக்கு சுறுசுறுப்பு
அருவருப்பு ஒதுக்கு வரும் சிறப்பு


(வனமெல்லாம் செண்பகப்பூ.... )

நாடோடி பாடுகாரன்
திரைப்படத்தின் பெயர்நாடோடி பாடுகாரன்
திரைப்பட நடிகர்கள்கார்த்திக்
இசைஅமைப்பாளர்இளையராஜா
திரைப்படத்தின் இயக்குனர்N.K. விஸ்வநாதன்
பாடல் வெளியான ஆண்டு 1992
பாடல்கள்9
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
ஆகைய தாமரை இளையராஜா, S. ஜானகி கிடைக்கவில்லை 4:59 படிக்க
காதலுக்கு கணங்கள் S.P.பாலசுப்பிரமணியம் கிடைக்கவில்லை 5:03 கிடைக்கவில்லை
மான்னையும் கிடைக்கவில்லை கிடைக்கவில்லை 5:50 கிடைக்கவில்லை
சிதிறது தெரிவா மனோ கிடைக்கவில்லை 5:03 கிடைக்கவில்லை
சொடிகுடுத்த சுடர் கிடைக்கவில்லை கிடைக்கவில்லை 5:47 கிடைக்கவில்லை
தென்பாண்டி சீமா தமிழ் கொடு கங்கை அமரன் கிடைக்கவில்லை 4:26 கிடைக்கவில்லை
வாங்க வாங்க கோரஸ், மலேசியா வாசுதேவன், மனோ கிடைக்கவில்லை 5:08 கிடைக்கவில்லை
வனம் எல்லாம் செண்பகபூ S.P.பாலசுப்பிரமணியம் கிடைக்கவில்லை 5:15 படிக்க
வனமெல்லாம் சோனக (f) P.சுசீலா, S.P.பாலசுப்பிரமணியம் கிடைக்கவில்லை 4:20 படிக்க