நெஞ்சத்திலே நெஞ்சதி பாடல்கள் மற்றும் விவரங்கள்

(அந்தாதி)


நெஞ்சத்திலே நெஞ்சத்திலே
நீதானே மொத்ததிலே

மொத்ததிலே உனழகை
கண்டேனே முத்ததிலே

முத்ததிலே ஓசை இல்லை
சத்தமெல்லாம் வெட்கத்திலே

வெட்கத்திலே தத்தளித்தால்
காதல் பொங்கும் நெஞ்சத்திலே

நெஞ்சத்திலே நெஞ்சத்திலே
நீதானே மொத்ததிலே

மொத்ததிலே உனழகை
கண்டேனே முத்ததிலே

(வொகலிசிங்க்)

நீ பேசியும்
நான் பேசியும்
தீராதம்ம பொழுதுகள்

பொழுதுகள் தீரலாம்
மாராதென்றும் இனிமைகள்

இனிமைகள் முளைத்தன
ஆதாம் ஏவாள் தனிமையில்

தனிமையில் இருவரும்
பேசும் மௌனம் இள வெய்யில்

வெய்யில் சாரலடிக்கும்
நிழல் கூடி அணைக்கும்

அணைக்கும் ஆசை ஆயிரம்
அழைக்கும் பாஷை பாசுரம்

சுரம் ஏழிலும்
சுவை ஆரிலும்
கூடும் இன்பம் நெஞ்சத்திலே

நெஞ்சத்திலே நெஞ்சத்திலே
நீதானே மொத்ததிலே

மொத்ததிலே உனழகை
கண்டேனே முத்ததிலே



வா என்பதும் போ என்பதும்
காதல் மொழியில் ஒரு பொருள்

ஒரு பொருள் தருவதால்
நீயும் நானும் மரை பொருள்

பொருள் வரும் புகழ் வரும்
ஆனால் வாழ்வில் எது சுகம்?

சுகம் தரும் சுவை தரும்
காதல் போல எது வரும்

வரும் வார்த்தை தயங்கும்
நம்மை பார்த்து மயங்கும்

மயங்கும் மாலை சூரியன்
கிரங்கும் நாளும் ஐம்புலன்

புலன் ஐந்திலும்
திசை நாங்கிலும்
தேடும் இன்பம் நெஞ்சத்திலே

நெஞ்சத்திலே நெஞ்சத்திலே
நீதானே மொத்ததிலே

மொத்ததிலே உனழகை
கண்டேனே முத்ததிலே

முத்ததிலே ஓசை இல்லை
சத்தமெல்லாம் வெட்கத்திலே

வெட்கத்திலே தத்தளித்தால்
காதல் பொங்கும் நெஞ்சத்திலே

பிரிவோம் சந்திப்போம்
திரைப்படத்தின் பெயர்பிரிவோம் சந்திப்போம்
திரைப்பட நடிகர்கள்சேரன், ஜெயராம், முருகேசன், சங்கீதா, சன் லக்ஷ்மி, ஸ்னேஹா
இசைஅமைப்பாளர்வித்யாசாகர்
திரைப்படத்தின் இயக்குனர்கரு பழனியப்பன்
பாடல் வெளியான ஆண்டு 2007
பாடல்கள்6
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
இரு விழியோ சிரக சைந்தவி, வினித் Not Available 5:10 படிக்க
கண்டேன் கண்டேன் கார்த்திக், ஸ்வேதா Not Available 4:12 படிக்க
கண்டும் காணமல் சாதனா சர்கம் Not Available 4:22 படிக்க
மெதுவா மெதுவா ஹரிணி, கார்த்திக் Not Available 3:52 படிக்க
நெஞ்சத்திலே நெஞ்சதி ஜெயராம், ஸ்ரேயா கோஷல் Not Available 4:30 படிக்க
சொல் சொல் என் நெஞ்சே பல்ராம் Not Available 4:20 படிக்க