தாழையாம் பூமுடித்து பாடல்கள் மற்றும் விவரங்கள்

ட்ம்ஸ்: தந்தன நா..தான தன்னா...தந்தன நா....தந்தானே
ஈஈஈஈ
தானே தந்தி தன்ன ஒஹ்...தன்னானே ஈஈஈஈ
தாழையாம் பூ முடிச்சி தடம் பார்த்து நடை நடந்து
ப்ள்: நடை நடந்து
ட்ம்ஸ்: வாழை இலை போல வந்த பொன்னம்மா
ப்ள்: பொன்னம்மா
ட்ம்ஸ்: என் வாசலுக்கு வாங்கி வந்தது என்னம்மா
ப்ள்: என்னம்மா

ட்ம்ஸ்: தாழையாம் பூ முடிச்சி தடம் பார்த்து நடை நடந்து
வாழை இலை போல வந்த பொன்னம்மா
என் வாசலுக்கு வாங்கி வந்தது என்னம்மா

ப்ள்: பாழை பொல் சிரிப்பிருக்கு பக்குவமாய் குணமிருக்கு
ட்ம்ஸ்: குணமிருக்கு
ப்ள்: ஆளழகும் சேர்ந்திருக்கு கன்னையா
ட்ம்ஸ்: கன்னையா
ப்ள்: இந்த ஏழைகளுக்கென்ன வேணும் சொல்லையா
சொல்லய்யா
ப்ள்: பாழை பொல் சிரிப்பிருக்கு பக்குவமாய் குணமிருக்கு
ஆளழகும் சேர்ந்திருக்கு கன்னையஸ்
இந்த யெழைகளுக்கென்ன வேணும் சொல்லையா

ட்ம்ஸ்: தாந்தான தான தன்னே.....
தயாரின் சீதனமும் ஒஹ்
தம்பிமார் பெறும் பொருளும் ஊஊஊஊஊ
தயாரின் சீதனமும்
தம்பிமார் பெறும் பொருளும்
மாமியார் வீடு வந்தால் போதுமா
அது மானபிமானங்களைக் காக்குமா
மானபிமானங்களைக் காக்குமா

ட்ம்ஸ்: தாழையாம் பூ முடிச்சி தடம் பார்த்து நடை நடந்து
வாழை இலை போல வந்த பொன்னம்மா
என் வாசலுக்கு வாங்கி வந்தது என்னம்மா
தந்தான தான தன்னா.....தன்னனே ஹொய்..

ப்ள்: வானமே ஆடைகளாம் மரியாதை பொன் நகையாம்
வானமே ஆடைகளாம் மரியாதை பொன் நகையாம்
நாணமாம் துணை இருந்தால் போதுமே
எங்க்கல் நாட்டு மக்கள் குல பெருமை தோன்றுமே
நாட்டு மக்கள் குல பெருமை தோன்றுமே

பாழை பொல் சிரிப்பிருக்கு பக்குவமாய் குணமிருக்கு
ஆளழகும் சேர்ந்திருக்கு கன்னையா
இந்த ஏழைகளுக்கென்ன வேணும் சொல்லையா

ட்ம்ஸ்: அங்கம் குறைந்தவனை..
அங்கம் குறைந்தவனை ஓஊஊஊஊஊ
அங்கம் குறைந்தவனை
அழகில்லா ஆண் மகனை
மங்கையர்கள் நினைப்பதுண்டோ பொன்னம்மா
வீட்டில் மணம் பேசி முடிப்பதுண்டொ சொல்லம்மா
மணம் பேசி முடிப்பதுண்டொ சொல்லம்மா

ப்ள்: மண் பார்த்து விளைவதில்லை
மரம் பார்த்து படர்வதில்லை
மண் பார்த்து விளைவதில்லை
மரம் பார்த்து படர்வதில்லை
கன்னியரும் பூங்கொடியும் கன்னையா
அவர் கண்ணிலே களங்கம் உண்டோ சொல்லையா
கண்ணிலே களங்கம் உண்டோ சொல்லையா

பாழை பொல் சிரிப்பிருக்கு பக்குவமாய் குனமிருக்கு
ஆளழகும் சேர்ந்திருக்கு கன்னையா
இந்த ஏழைகளுக்கென்ன வேணும் சொல்லையா

ட்ம்ஸ்: தாழையாம் பூ முடிச்சி தடம் பார்த்து நடை நடந்து
வாழை இலை போல வந்த பொன்னம்மா
என் வாசலுக்கு வாங்கி வந்தது என்னம்மா
தந்த தன நீஈஈ..தானே நெ...ஸ்



பாக பிரிவினை
திரைப்படத்தின் பெயர்பாக பிரிவினை
திரைப்பட நடிகர்கள்B. சரோஜாதேவி, M.R. ராதா, சிவாஜி கணேசன்
இசைஅமைப்பாளர்பழையது
திரைப்படத்தின் இயக்குனர்A. பிம்சிங்
பாடல் வெளியான ஆண்டு 1959
பாடல்கள்7
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
ஆட்டம் ஆட்டம் AL. ராகவன், ஜமுனாராணி கிடைக்கவில்லை 3:18 கிடைக்கவில்லை
ஓட்ருமயைவாழ்வதாலே LR. ஈஸ்வரி, சீர்காழி கோவிந்தராஜன் கிடைக்கவில்லை 3:36 கிடைக்கவில்லை
பிள்ளையார் கோவிலுக்கு P. லீலா, TM. சௌந்தரராஜன் கிடைக்கவில்லை 4:24 கிடைக்கவில்லை
தாழையாம் பூமுடித்து P. லீலா, TM. சௌந்தரராஜன் Kannadasan 6:29 படிக்க
தங்கத்திலே ஒரு குறை P.சுசீலா Kannadasan 3:32 படிக்க
தேரோடும் P.சுசீலா, TM. சௌந்தரராஜன் கிடைக்கவில்லை 7:09 கிடைக்கவில்லை
ஏன் பிறந்தை மகனே TM. சௌந்தரராஜன் Kannadasan 3:30 படிக்க